வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (13:19 IST)

உங்க வாய்ஸ் கேவலமா இருக்கு: விஜய்சேதுபதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

அவெஞ்சர்ஸ் படத்திற்கு டப்பிங் பேசியிருக்கும் வாய்ஸ் சுத்தமாக நல்லா இல்லை என ரசிகர்கள் கூறுகின்றனர்.
வரும் 26ம் தேதி அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படம் இந்தியாவில் ரிலீஸாகிறது. இப்படத்தின் தமிழ் டிரெய்லர் நேற்று வெளியானது. டிரைலரை பார்த்த ஏராளமான ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானர். இதற்கு காரணம் விஜய்சேதுபதி.
 
ஏனென்றால் தமிழில் இப்படத்தில் அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. விஜய்சேதுபதியின் வாய்ஸ் டோனியின் வாய்சிற்கு சுத்தமாக ஈடுகொடுக்கவில்லை என புலம்புகின்றனர். தயவுசெய்து விஜய்சேதுபதியின் வாய்ஸை மாற்றுங்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.