1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (13:22 IST)

கருப்பு பணத்தினை வெள்ளையாக மாற்றும் சினிமா துறை; இயக்குநர் சேரன் பேச்சு

இயக்குநரும், நடிகருமான சேரன் கோவில்பட்டியில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கொண்டார். அதில் கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

 
நிகழ்ச்சியில் கலந்து பேசிய அவர், பார்க்கிற சினிமாவிற்கும், அதை எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமா  தற்போது விவசாயம் மாதிரியாகிவிட்டது. முதலீடு திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம். அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் பண்றவங்களும் இருக்கிறார்கள்.  ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர்.
 
சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் படத்தினை வாங்கி வெளியிடுகின்றனர். இதனால் மற்ற தொழில்களில் கிடைத்த கருப்பு பணத்தினை சினிமாவில் போட்டு வெள்ளையாக மாற்றிக்கொள்ளும் வழியை கண்டுபிடித்துள்ளனர்.  இவர்களால் சினிமா துறை சீரழிந்து வருவதாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.