1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:48 IST)

பெயரை மாற்றிய இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தன்னுடைய பெயரை ஸ்ரீ என சுருக்கியுள்ளார்.
பிரபுதேவா, மீனா, விவேக், சங்கீதா நடிப்பில் 2000இல் ரிலீஸான ‘டபுள்ஸ்’ படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதன்பிறகு ‘எம் குமரன்  சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சிவகாசி’, ‘பூலோகம்’, ‘திருநாள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்துக்காக, தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றவர் ஸ்ரீகாந்த் தேவா. இந்நிலையில், இவர்  தன்னுடைய பெயரை ஸ்ரீ என சுருக்கி வைத்துள்ளார். நியூமராலஜிப்படி பெயரை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இவர் இசையமைத்துள்ள ‘நாகேஷ் திரையரங்கம்’ இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தில் ஆரி, ஆஷ்னா ஜவேரி ஆகியோர் நடித்துள்ளனர்.