Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தல அஜித்துடன் முதல்முறையாக இணையும் இசையமைப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Last Modified புதன், 14 பிப்ரவரி 2018 (17:23 IST)
தல அஜித் நடிக்கும் அடுத்த படமான 'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதற்கான விடை சற்றுமுன் கிடைத்துவிட்டது. ஆம், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 'விசுவாசம்' படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளது மட்டுமின்றி அஜித்தை ஒரு பாடலையும் பாட வைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் கழட்டிவிடப்பட்டு, முதல்முறையாக டி.இமான் அஜித்துடன் இணைந்துள்ளார். மெலடி பாடல்களை கம்போஸ் செய்வதில் கிங் என்று பெயரெடுத்துள்ள இமான், இந்த படத்திலும் மெலடிகளை போட்டு அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்


இதில் மேலும் படிக்கவும் :