திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:40 IST)

வேலைக்காரனுக்கு அதிக விலை கொடுத்த நிறுவனம்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத் பாஷில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் கேரள உரிமை அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் முக்கிய வேடத்தில்  ஃபகத் ஃபாஸில், சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே. பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை தேசிய விருதுகளை பெற்ற 2 மலையாள படங்களை தயாரித்த ஈ4 நிறுவனம் அதிக விலைக்கு வாங்கி உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. என்றாலும், பகத்பாசில், நயன்தாரா இதில் நடித்திருப்பதால் இந்த நிறுவனம் ‘வேலைக்காரன்’ பட வினியோக உரிமையை விரும்பி வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 
படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது.