செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (15:46 IST)

தப்பு கணக்கு போட்ட விஜய்: தளபதி 63 படப்பிடிப்பு நிறுத்தம்; படக்குழு எடுத்த அதிரடி முடிவு

சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு பெயரிடப்படாததால் தளபதி 63 என அழைக்கப்பட்டது. 
 
இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு ஆகியோர் ஒப்பந்தமாகி இருந்தனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. 
 
ஆம், காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 
ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என படப்பிடிப்பு துவங்கும் முன் சொன்ன போது, சென்னையில் நடத்தினால் மட்டுமே இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கூறியதால், இங்கேயே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
 
ஆனால், சென்னையில் தொடர்ச்சியாக ரசிகர்கள் தொந்தரவு இருந்து வருவதால், தினமும் திட்டமிட்ட காட்சிகளை படமாக்க முடியவில்லை. எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  இனி மேல் படப்பிடிப்பு பொதுவெளியில் நடத்தப்படாமல், அரங்கிற்குள்ளேயே நடத்தபடும் என படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். 
 
அதற்குள் பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பை துவங்க தளபதி 63 படக்குழு முடிவு செய்துள்ளது.