வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (09:05 IST)

ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றதா ஜெயலலிதா-சசிகலா பயோபிக் படங்கள்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். சசிகலா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடிக்க நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. 'தலைவி' என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படம் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது
 
இந்த நிலையில் ஜெயலலிதா பயோபிக் படத்தை அடுத்து சசிகலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார். இந்த படம் ஜெயலலிதாவுடன் சசிகலாவுக்கு இருந்த உறவு முதல் பெங்களூர் சிறைக்கு சசிகலா செல்வது வரை படமாக்கப்படுமாம். 
 
மேலும் இந்த படத்தை ஜெயலலிதாவின் பயோபிக் படமான 'தலைவி' படம் ரிலீஸாகும் அதே தினத்தில் வெளியிட ராம்கோபால் வர்மா திட்டமிட்டுள்ளாராம். ஒரே நாளில் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரின் திரைப்படங்கள் வெளியானால் பெரும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உண்மை