1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (17:51 IST)

தலைவாசல் விஜய் மகளை மணந்த தமிழக கிரிக்கெட் வீரர்: வைரல் புகைப்படம்..!

தமிழ் திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணாவை தமிழக கிரிக்கெட் வீரர் இன்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தமிழக கிரிக்கெட் வீரர் சேப்பாக் சூப்பர் கில்லி அணியின் கேப்டன் அபராஜித் நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணாவை திருமணம் செய்ய போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 
 
இந்த திருமணம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் அபராஜித் இன்று விஜய்யின் மகள் ஜெயவீணாவை திருமணம் செய்து கொண்டார் 
 
திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்கள் வைரல் ஆகி வருகிறது. இந்த திருமணத்திற்கு  கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran