வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2023 (13:26 IST)

ஓவர் எடையால் ஓட முடியாமல் ரன் -அவுட் ஆன வீரர் ….வைரலாகும் வீடியோ

Rakheem
அதிக எடையின் காரணமாக ஓட முடியாமல் ரன் அவுட்டான வெஸ்ட் இண்டீஸ் வீரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்று கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்  நடைபெற்று வருகிறது.

இதில், நேற்றைய ஆட்டத்தில்,  செயின்ட் லூசியா கிங்ஸ், பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் விளையாடின.

இதில், முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து பேட்டிங் செய்ய பார்படாஸ் அணி 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

இந்த அணி சார்பில் தொடங்க வீரராகக் களமிறங்கிய ரக்கீம் கார்ன்வால் முதல் பந்தில், ரன் எடுக்க ஓட முடியாமல், ரன் அவுட்டாகினார்.

முக்கியமான போட்டியில், அதுவும் தொடக்க வீரராக களமிறங்கி இப்படி ரன் அவுட்டாகிய அவர் மீது ரசிகர்கள் விமர்சனம் கூறி வருகின்றனர்.

அதிக எடையின் காரணமாகத்தான் ரக்கீமால் ஓடமுடியவில்லை என்றும் அவர் விளையாட்டு வீரராக இருந்து கொண்டு எடைகுறைப்பில் கவனம் செலுத்த வேண்டுமென்று அவருக்கு  ஆலோசனை கூறிவருகின்றனர்.