1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (15:02 IST)

"கட்டுப்பாடில்லாமல் போன போட்டியாளர்கள் " அதிரடியாக நிறுத்தப்பட்ட பிக்பாஸ் ?

இந்தியா முழுக்க ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி , தமிழ் , தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் பட்டய கிளப்பி வருகிறது. 


 
சண்டை , சர்ச்சை , காதல் , பொறாமை , பழிவாங்குதல் என ஒரு மனிதனின் அத்தனை அம்சங்களையும் கொண்ட 15 பேர் பேர் ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கவைக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பை பெற்றாலும், இதனை எதிர்த்து  பல சமூக சீர்திருத்தவாதிகள் கண்டனங்களை எழுப்புவதும் உண்டு. 
 
அந்த வகையில் தமிழில் முன்றாவது நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க பெரும் சர்ச்சைகளையும் வரவேற்பையும் பெற்ற  இந்நிகழ்ச்சி ஆஹா ஓஹோ என ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசன் பிரபல நடிகரான நாகார்ஜூனா தொகுத்துவழங்கவுள்ளதாக தகவல் கிடைத்து. 
 
ஆனால் தெலுங்கு பிக்பாஸ் துவங்கும் முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சில பெண்கள் இந்நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது casting couch புகார் தெரிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள பிக்பாஸ் ஷூட்டிங்கை நிறுத்தும்படி தொகுப்பாளராக உள்ள நடிகர் நாகார்ஜூனா கேட்டுக்கொண்டுள்ளதாக என தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே இந்நிகழ்சியியை பற்றிய  நெகடிவ் விமர்சனங்ககள் அடங்கிய பிறகு துவங்கலாம் என நாகார்ஜூனா சம்மந்தப்பட்ட டிவி நிறுவனத்திடம் கேட்டுள்ளாராம்.