ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (13:03 IST)

அஜித்திடம் எடுத்து சொல்லுங்க! தல ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த யாஷிகா!

அஜித் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த யாஷிகா!



பிக்பாஸ் சீசன் 2- வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.   அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் "ஜாம்பி" படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 
 
சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது . லைவ் சாட்டில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு கூச்சமேயில்லாமல் மிகவும் ஓப்பனாக பதிலளித்து பலரையும் முகம்சுளிக்க வைப்பார். 
 
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவ் சாட்டில் பதிலளித்து வந்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று கூற, அதற்கு யாஷிகா ‘நீங்கள் அவரிடத்தில் போய் சொல்லுங்க, அவருடன் நடிக்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன் என்று  சொல்லுங்க அப்போதாவது அவர் கேட்பார்’ என்று பதில் கூறியுள்ளார்.