அஜித்தின் அடுத்த படத்தில் இணைந்த கமல் பட இசையமைப்பாளர்

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித்தின் 60வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாம். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார்
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்த ஜிப்ரான், தற்போது முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்காக ஜிப்ரான் நான்கு பாடல்களையும் ஒரு தீம் மியூசிக்கையும் கம்போஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

மேலும் அஜித் 60' படத்தில் இரண்டு நாயகிகள் என்றும், அதில் ஒருவர் நிக்கி கல்ராணி என்றும் இன்னொருவர் பாலிவுட் நடிகை என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை நடிக்கும் கேரக்டர் கொஞ்சம் நெகட்டிவ் சாயலில் இருக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :