ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2017 (21:50 IST)

தொலைகாட்சி நிகழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டுகிறதா அருவி?

லட்சுமி ராமகிருஷ்ணன் திரைப்பட நடிகையும், இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர். மலையாளத்தில் அறிமுகமான இவர் தமிழில் துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்று  ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இதில் இவர் தொகுப்பாளராக நிகழ்ச்சியில் பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை  விவாதமாக எடுத்து நேரடியாக விவாதங்கள் நடப்பதுண்டு.
 
இந்த நிகழ்ச்சி 1500 எபிசோட் கடந்து சென்று கொண்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்துள்ளது. சமீபத்தில் வந்த அருவி படம்  இந்நிகழ்ச்சியின் மறுப்பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இப்படத்தில் அந்த நிகச்சியில் வரும் அனைத்தும்  ட்ராமாதான், இதில் வரும் மக்களை வேண்டுமென்றே அழ வைக்கின்றனர், இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுவது எல்லாம்  இயக்குனர் சொல்லி கொடுப்பதுதான் என்பதுபோல் அப்படத்தில் காட்டியிருப்பார்கள். இந்த காட்சிகளுக்கு திரையரங்கிலும் நல்ல  வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.