செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (17:07 IST)

நயன்தாராவுக்கு அம்மாவாக நடிக்கும் ஆசைப்படும் நாட்டாமை நடிகை

சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் நாட்டாமை செய்யும் லட்சுமி ராமகிருஷ்ணன், நயனுக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படுகிறார்.


 

 
சில வருடங்களுக்கு முன்புவரை, ஹீரோ – ஹீரோயின்களின் அம்மா என்றால், கோடம்பாக்கத்தில் முதல் பெயராக லட்சுமி ராமகிருஷ்ணன் பெயர்தான் பரிசீலிக்கப்படும். ஆனால், அவரே படங்கள் இயக்க ஆரம்பித்த பிறகு, நடிப்பது குறைந்துவிட்டது. அதுவும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தபிறகு, அவரை அம்மா வேடங்களில் நடிக்க அழைப்பதை நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ‘சைமா விருது’ வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், அருகில் அமர்ந்திருந்த நயன்தாராவுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டார். அதை ட்விட்டரில் பதிவிட்டவர், “நாங்கள் இருவரும் அம்மா – மகளாக நடித்தால் எப்படி இருக்கும்?” என்றும் குறிப்பிட்டுள்ளார்.