திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 நவம்பர் 2024 (12:52 IST)

டீசர்லாம் மாஸ்தான்.. ஆனா கதை? தப்பிப்பாரா சங்கர்? - கேம் சேஞ்சர் டீசர் ரியாக்‌ஷன்!

Game Changer

சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து தயாராகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி வைரலாகியுள்ளது.

 

 

இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். உடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஜரகண்டி, ரா மச்சா, மச்சா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி இருந்தன.

 

இந்நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் டீசர் வெளியானது. அரசியல் பின்னணியை கொண்டதாக காணப்படும் கேம் சேஞ்சர் படத்தின் டீசர் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளும், மாஸ் காட்சிகளுமாக நிரம்பியுள்ளன. இதில் ராம்சரண் இரண்டு கதாப்பாத்திரங்களாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 
 

 

டீசரில் காட்டப்படு அதீத மாஸ் காட்சிகள் தெலுங்கில் உள்ள ராம்சரண் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம், ஆனால் மற்ற மொழி ஆடியண்ஸ்க்கு சரியாக வொர்க் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபோல டீசர் முழுவதும் கலர் கலரான பாடல் காட்சிகளும், அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுமாக காட்டப்பட்டதே தவிர, படத்திலிருந்து நல்ல வசனமோ, கதை இதுதான் என்பதை உணர்த்தும்படியான காட்சிகளோ இல்லை என்பது பலருக்கு ஏமாற்றமாக உள்ளது.

 

எனினும் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை ஷங்கர் படமாக்குகிறார் என்பதாலும், இந்தியன் 2 படத்தால் வீழ்ச்சியில் உள்ள சங்கருக்கு இந்த படம் முக்கிய திருப்புமுனையாக உள்ளதும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

 

Edit by Prasanth.K