செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (07:36 IST)

மெரிசலுக்கே சவால் விட்ட தமிழ் ராக்கர்ஸ்

கோலிவுட் திரையுலகையே ஆட்டி படைத்து வரும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களை பிடிக்க விஷால் உள்பட பலர் தீவிர முயற்சிகள் எடுத்து வந்தாலும் அடங்க மறுக்கும் தமிழ் ராக்கர்ஸ், தொடர்ந்து தமிழ் திரையுலகினர்களை மிரட்டி வருகிறது.



 
 
இந்த நிலையில் நேற்று விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் வெளியாக பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ்களில் சாதனை புரிந்துள்ள நிலையில் 'மெர்சல் படத்தை முதல் நாளே ஹைகுவாலிட்டி பிரிண்டில் வெளியிட காத்திருக்கின்றோம்' என்று டுவிட்டரில் சவால் விட்டுள்ளனர்.
 
இந்த சவாலை சமாளிக்க 'மெர்சல்' குழுவினர்களும், நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்ய போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்