ரம்ஜானைக் குறிவைக்கும் படங்கள்

Cauveri Manickam| Last Modified வியாழன், 18 மே 2017 (12:23 IST)
அடுத்த மாதம் வரப்போகும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இதுவரை 3 படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன.

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல் பாகம், ரம்ஜானுக்கு  ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். சிம்பு நான்கு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், ஸ்ரேயா சரண், தமன்னா, சனா கான்  நடித்துள்ளனர். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.
 
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடித்துள்ள படம் ‘வனமகன்’. டார்ஜான் போல காட்டிலேயே பிறந்து, அங்கேயே  வளர்ந்த ஜெயம் ரவி, நகரத்துக்குள் வரும்போது நிகழும் சம்பவங்கள்தான் கதை. இந்தப் படம், நாளை ரிலீஸாவதாக இருந்தது.  ஆனால், 30ஆம் தேதி முதல் ஸ்டிரைக் நடத்த விஷால் திட்டமிட்டிருப்பதால், அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,  ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்கின்றனர்.
 
இந்நிலையில், கெளதம் கார்த்திக் நடித்திருக்கும் ‘ரங்கூன்’ படத்தையும் ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். ஃபாக்ஸ்  ஸ்டாருடன் இணைந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 3 படங்கள் மோத இருப்பதால்,  ஒவ்வொரு படத்துக்கும் அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :