1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (10:57 IST)

வீட்டிலேயே சூதாட்ட கிளப் – பிரபல தமிழ் நடிகர் கைது!

நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக போலிஸாருக்கு தகவல் வர, அங்கு சென்று போலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழ் நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த வீடு ஷ்யாமுடையது என்றும் சூதாட்டத்தை நடத்தியதே அவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலிஸார் சொந்த ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.