திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (10:17 IST)

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தமிழ் திரைப்பட ஹீரோ ஷாம் கைது

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தமிழ் திரைப்பட ஹீரோ ஷாம் கைது
12பி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின்னர் பல திரைப் படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்தவர் நடிகர் ஷாம். இவர் கடந்த சில வருடங்களாக சினிமா வாய்ப்பு இல்லாமல் உள்ளார் 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகர் ஷாம் தனது வீட்டில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாகவும் அதில் சினிமா நடிகர்கள் உள்பட பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன
 
இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உடனடியாக ஷாம் வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தனர். அப்போது ஷாம் உள்பட 14 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடியதாகவும் தெரியவந்தது இதனை அடுத்து ஷாம் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்த ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது