என்.ஜி.கே-வை தொடர்ந்து சூர்யாவின் நெக்ஸ்ட்: காக்க காக்க 2!!

Last Updated: புதன், 13 பிப்ரவரி 2019 (17:19 IST)
வெற்றிப்படங்களின் 2 ஆம் பாகத்தை எடுப்பது தற்போது கோலிவுட்டின் டிரெண்ட். இதில் சில படங்கள் மட்டுமே வெற்றி படங்களாக அமைகிறது. 
 
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டும் வெளியாக காக்க காக்க படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம். காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இது குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், படத்தில் சூர்யா - ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வரும் சூர்யாவின் அடுத்த படத்தின் அறிவிப்பு காக்க காக்கா 2 ஆக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :