என்னுடைய மகள் திருமணத்துக்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினி அறிக்கை

VM| Last Updated: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (18:55 IST)
என்னுடைய மகள் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சிதெரிவித்துள்ளார்.


 
"என் மகள் சௌந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரை உலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள்,காவல்துறை நண்பர்கள், திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" 
 
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :