வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (16:30 IST)

சயிரா நரசிம்மா ரெட்டி - முதல் விமர்சனம்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ள சயிரா நரசிம்மா ரெட்டி படத்தின் முதல் விமர்சனம் டிவிட்டரில் வெளியாகியுள்ளது. 
 
அரசியலில் இருந்து விலகிய பின்னர் கிட்டதட்ட 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு 2017 ஆம் ஆண்டு கைதி நம்பர் 150 என்ற படத்தில் நடித்தார் சிரஞ்சீவி. கத்தி படத்தின் ரீமேக்கான இது டோலிவுட்டில் சிரஞ்சீவிக்கு இன்னும் மவுசு இருப்பதை நிரூபித்தது. 
 
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உற்சாகமாக சிரஞ்சீவி மீண்டும் தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வர முடிவெடுத்து வரலாற்று பின்னணி கொண்ட கதையில் நடிக்க தயாரானார். அங்கு துவங்கியதுதான் சயிரா நரசிம்மா ரெட்டி. 
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றின கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றின கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. ரூ.250 கோடி பட்ஜெட்டில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராமச்சரண் தனது KONIDELA புரொடக்ஷன் மூலம் படத்தை தயாரித்துள்ளார். 
 
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் விமர்சனம் டிவிட்டரில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் படம் வெளியாகியுள்ள நிலையில் விமர்சகர் உமர் சந்து படம் எப்படி இருக்கிறது என தெரிவித்துள்ளார். 
 
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சயிரா நரசிம்மா ரெட்டி ஒரு அற்புதமான சினிமா அனுபவம். சிரஞ்சீவி, சயிரா நரசிம்ம ரெட்டியில் தனது சினிமா வாழ்க்கையின் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
சயிரா நரசிம்மா ரெட்டி ஒரு உணர்ச்சிபூர்வமான பயணமாக இருக்க போகிறது. இது நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும். ஆந்திர, தெலுங்கானா வசூலை படம் குவித்து தள்ளும். இது போன்ற படங்கள் நிச்சயம் பல இயக்குனர்களை ஊக்குவிக்கும். 
 
இப்போது இது பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக உருவெடுக்கும். ஆனால், வரலாற்றில் முக்கிய படமாக இடம்பெரும். சிரஞ்சீவி துவக்கம் முதல் கடைசி வரை படத்தில் மீதான கவனத்தை சிதறவிடாம் வைத்துள்ளார். 
 
படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் சிறப்பான தேர்வு. அமிதாப் பச்சன் டெரிஃபிக், கிச்சா சுதீப் வண்டர்ஃபுல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.