1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (11:50 IST)

பிளாக்பெல்ட் வாங்கிய மகனுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து..! வைரல் வீடியோ..!

நடிகர் சூர்யா மகன் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளதை அடுத்து தனது மகனுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா மற்றும் தேவ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் தற்போது சூர்யா தனது குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய சூர்யாவின் மகன் தேவ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் சூர்யா கலந்து கொண்டு தனது மகனை பாராட்டி ஊக்குவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அந்த வீடியோவில் தனது மகனுக்கு மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் பிளாக் பெல்ட் வாங்கிய அனைவருக்கும் சூர்யா வாழ்த்து தெரிவித்தார்.

Edited by Siva