1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:54 IST)

ரெமோ இயக்குனரின் படத்தில் இருந்து விலகிய எஸ் ஜே சூர்யா… இப்ப இவர்தான் ஹீரோ!

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் கார்த்தி நடித்த சுல்தான் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். இரண்டு படங்களுமே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவானாலும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை.

இதனால் சுல்தான் படத்துக்குப் பிறகு அடுத்த பட வாய்ப்புக் கிடைக்காமல் இருந்து வந்தார் பாக்யராஜ் கண்ணன். இந்நிலையில் இப்போது அவர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து எஸ் ஜே சூர்யா விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் இப்போது அந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இப்போது அவருக்கேற்றார்போல திரைக்கதையை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது என சொல்லப்படுகிறது.