சூர்யாவின் அடுத்தடுத்த இயக்குநர்கள் யார் தெரியுமா?

Surya
C.M.| Last Updated: சனி, 23 டிசம்பர் 2017 (15:20 IST)
சூர்யாவை அடுத்தடுத்து யார் இயக்கப் போகிறார்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது.

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார் சூர்யா. இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, சூர்யாவின் 35வது படம். சூர்யாவின் 36வது படத்தை, செல்வராகவன் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்கிறார்கள்.
 
இந்நிலையில், சூர்யாவின் 37வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற விவரமும் கிடைத்துள்ளது. ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் அது. சூப்பர் ஹிட்டான ‘மாநகரம்’ படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :