1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 24 மே 2019 (17:36 IST)

’போதை ஏறி புத்தி மாறி’ - சூர்யா வெளியிட்ட மிரட்டலான டீஸர் !

போதை ஏறி புத்தி மாறி எனும் புதிய படம் ஒன்றின் மிரட்டலான டீசரை நடிகர் சூர்யா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அறிமுக நடிகரான தீரஜ், ராதாரவி, சார்லி மற்றும் பலர் நடிப்பில் போதை ஏறி புத்தி மாறி எனும் படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் மூலம் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். நலன் குமாரசாமியிடம் சூது கவ்வும் படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த கதிர் நடராசன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப்படத்தினை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் இசையமைப்பாளராக கே பி என்பவரும் பணியாற்றியுள்ளனர்.

போதை பழக்கத்தின் தீமைகளை சொல்லும் இந்தப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா இன்று டிவிட்டரில் வெளியிட்டு உள்ளார். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஸ்டோனர் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் படத்தின் இந்த டீசர் சமூகவலைதளங்களில் வெகுவாகக் கவனம் பெற்றுள்ளது. அபி அண்ட் அபி நிறுவனம் மூலம் இந்த படத்தை அபினேஷ் இளங்கோவன் வெளியிட இருக்கிறார். ஜூன் மாதத்தில் ரிலிஸ் ஆகவுள்ள இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டீசரின் லிங்க்