சூர்யாவின் என்ஜிகே எப்போது ரிலீஸ்?

VM| Last Modified சனி, 16 பிப்ரவரி 2019 (19:30 IST)
சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் என்ஜிகே படத்தை வரும் மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.


 
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரின் முடிவில் சூர்யா காத்திருப்போம் என கூறியிருந்தார். அவர் சொன்னதுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. படக்குழுவினர் வரும் மே மாதம் என்ஜிகே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
 
இது தொடர்பாக நம்பமாக தகவல்கள் கூறுவது என்னவென்றால், என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. அத்துடன் படக்குழுவும்  போஸ்ட் புரொடக்சன வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. சூர்யா சமீபத்தில் டீசருக்கு  டப்பிங் கொடுத்துவிட்டு சென்றார். படத்தின் மீத காட்சிகளுக்கு சூர்யா டப்பிங் கொடுக்க ஆரம்பித்துள்ளார். டீசரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள என்ஜிகே படம் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலுமாக படக்குழு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. எனவே  படத்தை முன்பாக திரைக்கு கொண்டுவர முயற்சி நடந்து வருகிறது. மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :