1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:16 IST)

சுரேஷ் ரெய்னாவிடம் ஜிம்மில் தோஸ்த்தான சாந்தனு பாக்யராஜ்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், நடிகர் சாந்தனு பாக்யராஜும் ஜிம்மில் தோஸ்த்தாகியுள்ளனர். 
அடையாறு கிரவுன் பிளாஸா எதிரே இருக்கும் பிளக்ஸ் ஜிம்மில் தான் எப்போதும் உடற்பயிற்சி செய்வார் சாந்தனு பாக்யராஜ். நேற்று வழக்கம்போல் ஜிம்மிற்குச் சென்றவர், அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் சுரேஷ் ரெய்னாவைப் பார்த்ததும் குஷியாகிவிட்டார்.
 
தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் டீம் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் சாந்தனு. கிரிக்கெட் மீது தீவிர ஈடுபாடு உள்ளவர். எனவே, தானும் ஒரு கிரிக்கெட் வீரன் என்றே சுரேஷ் ரெய்னாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அவரை வாழ்த்திய ரெய்னாவுடன் சேர்ந்து, ஒரு  ரசிகனாக செல்ஃபீயும் எடுத்துக் கொண்டார் சாந்தனு பாக்யராஜ்.