வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (09:53 IST)

நோட்டீஸ் அனுப்பிய டி.ராஜேந்தருக்கு டுவிட்டரில் பதில் கொடுத்த சுரேஷ் காமாட்சி!

மாநாடு படத்தின் சாட்டிலைட் பிரச்சனை தொடர்பாக டிராஜேந்தர் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் அந்த நோட்டீசுக்கு சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்
 
மாநாடு திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமம் தனக்கு தெரியாமலேயே விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு தான் பொறுப்பேற்று உள்ளதாகவும் டி ராஜேந்தர் இதுகுறித்து சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இந்த நோட்டீஸ் குறித்து சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
வெற்றி கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது. கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.