வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (09:35 IST)

சூப்பர் ஸ்டாராக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்… வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இவர் ஷாருக்கன் போன்று அதிரடி ஆக்‌ஷன் காட்டும் ஒரு வீடியோவை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக அவர் இந்திய சினிமாக்களில் வரும் #ButtaBomma போன்ற பாட்டுகளுக்கு மைதானத்தில் டேன்ஸ் ஆடுவது எல்லாம் மிகவும் பிரசித்தமானது.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், நடிகர் ஷாருக்கான ஒரு படத்தில் செய்யும் ஆக்‌ஷன் காட்சிகளைப் போன்று ஆனால் டேவிட் வார்னர் அதிரடி சண்டைபோடும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை 1 மில்லியன் மக்கள் லைக் செய்துள்ளனர்.