திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (19:59 IST)

சூப்பர் ஸ்டார் வாங்கிய ’’புல்லட் ஃப்ரூப் சொகுசு கேரவன்’’…இவ்வளவு வசதிகளா?

தென்னிந்திய நடிகர்களின் எல்லோராலும் மதிக்கப்படுபவரும் அதிக தேசிய விருதுகளை பெற்றவருமான சூப்பர் ஸ்டார் மம்முட்டி கொரோனா பாதிப்பால் நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார்.

சமீபத்தில் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சினிமா ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. பிரபல நடிகர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் மம்முட்டி தற்போது ஒரு மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். எனவே அவர் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காகச் செல்வதற்கு ஏற்கனவே சொந்தமாகக் கேரவன்கள் இருந்தாலும்கூட புதிதாக 5 நட்சத்திர புல்லட் ஃப்ரூப் வசதிகொண்ட கேரவன் ஒன்றை வாங்கியுள்ளார் அவர்.  இதன் நீளம் 12 மீட்டர் ( 3 அடி) ஆகும். இதில், வரவேற்பறை, படுக்கை அறை, கழிவறை போன்ற வசதிகள் அனைத்தும் உள்ளன.

மேலும், இந்தக் கேரவன்கள் பல கோடி ரூபாய்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த கேரவன் புகைப்படம் வைரலாகி வருகிறது.