வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (19:42 IST)

சென்னை தமிழின் கெட்ட வார்த்தையில் அழகாக திட்டும் சமந்தா!

சூப்பர் டீலக்ஸ் படத்தின் புதிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 

 
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படம் ரசிகர்கள்  மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் வித்தியாசமான இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்து வருகிறார்.
 
சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிருணாளினி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்றுகூடி நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. குறிப்பாக ட்ரைலரில்  விஜய் சேதுபதி மூச்சு விடாமல் பேசும் புலி கதை வசனம் செம்ம வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
இந்நிலையில் தற்போது சமந்தாவின் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் சமந்தா , வேம்பு கதாபாத்திரம் எனக்கு பயத்தை கொடுத்தது. ஆனால் அந்த பயத்தில்தான் எனக்கு கிக் இருந்தது. தமிழ்சினிமாவில் நாயகிகளுக்கென ஒருகதை உருவாக்கத்தை இப்படித்தான் என வைத்திருப்பார்கள். ஆனால் அதை எல்லாம் உடைத்து மாற்றி எழுதியது தான் வேம்பு கதாபாத்திரம்” என்று கூறியுள்ளார்.
 
கடைசியாக அந்த வீடியோவில் சென்னை பாஷையில் அவர் திட்டும் காட்சிகளும் இடம்பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துவிட்டது.