வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (13:29 IST)

பிஸியான வசனகர்த்தா விஜய் சேதுபதி!

நடிகர் விக்ராந்த் தற்போது தனது சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.



`தாக்க தாக்க’ படத்தை சஞ்ஜீவ் ஏற்கனவே இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் விக்ராந்த்துடன் இணைந்து விஷ்ணு விஷால் நடிக்க இருக்கிறார். 
 
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் கிரிக்கெட்டில் கில்லி என்பதால் இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படலாம் என்கிறார்கள். 
படத்தின் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை நடிகர் விஜய் சேதுபதி எழுதுவதுதான். படத்தின் கதையை இயக்குநர் சஞ்ஜீவ், விஜய் சேதுபதியிடம் கூற அது அவருக்குப் பிடித்துவிட்டதாம். விக்ராந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதுடன், படத்துக்கான வசனத்தையும் தாமே எழுதவா என்று ஆர்வமாகக் கேட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இதனால், படக்குழுவினர் செம ஹேப்பி அண்ணாச்சி. வாக்குக் கொடுத்தது போலவே தனது பிஸியான ஷெட்யூலிலும் இரவு நேரங்களை குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி படத்துக்கு வசனங்களை எழுதும் வேலையை இயக்குநருடன் இணைந்து செவ்வனே செய்துவருகிறாராம் மக்கள் செல்வன்..