1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:18 IST)

குஷ்புவின் பாஜக ஐக்கியத்துக்குக் காரணம் சுந்தர் சி யா? அவரே அளித்த பதில்!

நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்குக் காரணம் அவரின் கணவர் சுந்தர் சி தான் எனவும் சொல்லப்படுகிறது.

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவருமான குஷ்பூ பாஜகவில் சேர இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அதை உறுதிப் படுத்தும் விதமாக பாஜகவில் சேர்ந்தார். போன வாரம் வரை பாஜகவை விமர்சித்து வந்த குஷ்பு இப்போது அந்த கட்சியில் சேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்குக் காரணம் அவரின் கணவர் சுந்தர் சி தான் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சுந்தர் சி மறுத்துள்ளாராம். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.