குஷ்புவை அடுத்து பாஜகவில் இணைகிறாரா விஷால்?

vishal
குஷ்புவை அடுத்து பாஜகவில் இணைகிறாரா விஷால்?
siva| Last Modified திங்கள், 12 அக்டோபர் 2020 (17:28 IST)
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவருமான குஷ்பூ பாஜகவில் சேர இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தி உண்மையாகியுள்ளது. இன்று அதிகாரப்பூர்வமாக குஷ்பு பாஜகவில் இணைந்துவிட்டார் என்பதும் அவரை பாஜக வரவேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக குஷ்பு மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குஷ்பு போலவே பாஜகவில் சேர உள்ளதாக விஷால் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாஜக மேலிடத்தில் விஷால் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவருக்கு நிறைய கடன் இருப்பதால் கடன்களை தீர்ப்பதற்காக பாஜகவில் சேர இருப்பதாகவும் கூறப்பட்டது
ஆனால் குஷ்புவை போலவே விஷாலும் இந்த தகவல்களை மறுத்து வருகிறார். இந்த நிலையில் குஷ்புவை அடுத்து விஷாலும் விரைவில் பாஜகவில் சேருவார் என்றும் இது குறித்து அறிவிப்பும் அதிரடியாக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

மொத்தத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் பல திரையுலக நட்சத்திரங்களை தங்கள் கட்சியில் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :