ரஜினியின் அடுத்த படமும் சன்பிக்சர்ஸ் தான்: என்ன காரணம்?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அடுத்து ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது
தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இந்த படம் எதிர்பார்த்த வியாபாரம் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளதாம். கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் படப்பிடிப்பு தாமதம் காரணமாக ஏற்பட்ட பட்ஜெட் உயர்வு ஆகியவை காரணமாக வழக்கமான ரஜினி படத்திற்கு கிடைக்கும் வியாபாரம் இந்த படத்துக்கு நடக்கவில்லை என்று கூறப்படுகிறது
இதனை அடுத்து அதனை சரி கட்டுவதற்காக மீண்டும் ஒரு படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நடித்து கொடுக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் எனவே தலைவர் 161 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.