1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (12:27 IST)

அண்ணாத்த புரமோஷன் வேலையா? ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியானபோதும் அவரது ஹேட்டர்ஸ்கள் ‘அண்ணாத்த’ பட புரமோஷன் வேலையை ஆரம்பித்துவிட்டார் என்று கூறினர். இந்த நிலையில்ல் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார்
 
ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் அவர் அரசியல் பற்றிப் பேசுகிறார் என்று அரைகுறை அரசியல் விமர்சகர்கள் மட்டுமே கருத்து கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் படம் எந்தவித புரமோஷன் இல்லாமல் வெளியானாலும் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் அஜீத் விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் இப்போது இருந்தாலும் இன்றும் தமிழில் திரையுலகில் நம்பர் 1 நடிகர் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ரஜினியை வைத்து படம் எடுக்க இன்றும் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் வரிசையில் உள்ளனர் என்பதும் அவரது படங்களுக்கு  புரமோஷனே தேவையில்லை என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் என்பதும், ஆனால் வேண்டுமென்றே ரஜினியை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் புரமோஷனுக்காக அரசியல் பேசுகிறார் என்று கடந்த பல ஆண்டுகளாக அவரது ஹேட்டர்ஸ் கூறி வருகின்றனர் 
 
இன்றும் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருக்கும் போது ‘அண்ணாத்த’ படம் புரமோஷன் வேலையை ரஜினி ஆரம்பித்து விட்டதாக பொய்யான தகவலை பரப்பி வந்தனர் என்பதும், அவர்களுக்கு தனது அதிரடி அறிவிப்பின் மூலம் சாட்டையடி பதில் கொடுத்து விட்டார் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது