வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (15:28 IST)

எந்த கதாப்பாத்திரத்திற்கும் ஏற்ற நடிகை ! மறைந்தும் ரசிகர் நெஞ்சங்களில் !டிவிட்டரில் ட்ரெண்டிங்…

தென்னிந்திய திரைப்பட நடிகை சௌவுந்தர்யா. இவர் பொன்னுமணி என்ற படத்தில் கார்த்திக் -ன் முறைப்பெண்ணாக அறிமுகம் ஆனார். அதன்பின் இவரது நடிப்புத் திறமையின் மூலம் நடிகை சாவித்திரிக்கு பின் அனைத்து வேடத்திற்கும் பொருந்துகிற நடிகை என்று பெயர் எடுத்தார்.

தமிழில் ரஜினி,கமல், கார்த்தி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் நடித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் செல்லும்போது,  ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வந்த சௌந்தர்யாவின் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று சௌந்தர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அவரது பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.