ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (13:37 IST)

நான்.. நான்.. நான்.. என்று அலையிற மனுஷன் கமல்.. அவர் ஒரு கோமாளி.. பிக்பாஸ் குறித்து பிரபல பாடகி..!

கமல்ஹாசன் ஒரு கோமாளி என்றும் அவர் நான்.. நான்.. நான்.. என்று அலையிற ஒரு மனுஷன் என்றும் பிரபல பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் பிரதீப்பை வெளியேற்றியது அவருக்கு பெரும் கெட்ட பெயரை தந்துள்ளது.  தெரியாமல் செய்த ஒரு தவறை மறைப்பதற்காக அவர் மேலும் மேலும் பொய் சொல்லி நிகழ்ச்சியை நடத்துவது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் பாடகியும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சுசித்ரா, கமல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கமல் ஒரு Expiry ஆன மனிதன் என்றும்  நான் நான் நான் என்று அலைகிறவர் என்றும் கூறினார். 
 
விஜய் டிவி காலில் விழுந்து வாங்கிய வேலை தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வேலை என்றும் அவர் ஒரு தாத்தா என்றும் தன்னையே கோமாளி ஆக்கி ஒரு நிகழ்ச்சியை தான் அவர் நடத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார். 
 
கமல் மக்கள் நீதி மய்யம் என்ற பன்னி கூட்டத்தை வளர்த்து வருகிறார் என்றும் தேர்தலில் நிச்சயம் கமல் தோற்பார் என்றும் திமுக, மக்கள் நீதி மய்யம் என்ற அடிமை நாயை கொல்லையில் கட்டி வச்சிருக்காங்க என்றும் கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran