1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (08:29 IST)

சிம்பு படத்தின் பட்ஜெட்டில் கைவைத்த கமல்ஹாசன் நிறுவனம்!

பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அடுத்த ஆண்டுதான் ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருந்த படத்தின் பட்ஜெட்டை இப்போது 70 கோடியாக குறைக்கும் படி இயக்குனருக்கு வலியுறுத்தியுள்ளதாம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம். இதனால் இப்போது பட்ஜெட்டைக் குறைக்கும் பணிகளில் இயக்குனர் தேசிங் பெரியசாமி ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.