செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2018 (11:35 IST)

படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த தடம் படக்குழுவினர்

அருண் விஜய் நடிக்கும் ‘தடம்’ படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘தடையறத் தாக்க’ ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தடம் படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளதாக தெரிகிறது. ஸ்டன்ட்  மாஸ்டர் ஃபெஃப்சி விஜயனுக்கு மிரட்டலான வில்லன் ரோலில் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ‘ரேதன்-தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர்  குமார் தயாரிக்கிறார்.
அருண்ராஜ் என்பவர் இசையமைக்கும் இதற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் இந்தர் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
க்ரைம் த்ரில்லராக தயாராகிவரும் இதன் கதைக்களம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.