டெல்லியை அடுத்து சென்னையில் படமாகிறது துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’

CM| Last Modified புதன், 31 ஜனவரி 2018 (21:37 IST)
துல்கர் சல்மான நடித்துவரும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’.

மணிரத்னம் இயக்கத்தில், பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற பாடலில் இருந்து இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் வைரமுத்து.
இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது. துல்கர் சல்மான் நடிக்கும் நான்காவது தமிழ்ப்படம் இது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :