1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:17 IST)

பாலிவுட்டில் கால்பதிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.. நேரில் சென்று வாழ்த்திய சூர்யா & சிவகுமார்!

தமிழ் சினிமாவில் ஜில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தின் மூலமாக கால்பதித்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அவர்கள் தயாரித்த பருத்திவீரன் திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் அவர்கள் மீது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதன் பின்னர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து தொடர்ச்சியாக பல படங்களை தயாரித்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமானது. இப்போது சூர்யாவை வைத்து கங்குவா திரைப்படத்தையும், கார்த்தி நலன் குமாரசாமி படத்தையும், பா ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்து பாலிவுட்டில் கால்பதித்து இந்தி சினிமாக்களை தயாரிக்க உள்ளதாக அதன் நிறுவனர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார். இதையடுத்து மும்பையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அலுவலகத்தை நடிகர் சூர்யா மற்றும் அவரின் தந்தை சிவகுமார் ஆகியோர் திறந்து வைத்து வாழ்த்தியுள்ளனர்.