1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (08:07 IST)

சூர்யாவை இயக்குகிறாரா ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ்?

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸானது. இந்த படம் வெளியாகிப் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றது.

இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில்  இயக்குனர் தமிழ் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்கவில்லை. இப்போது பல படங்களில் நடிகராக நடித்து வரும் இயக்குனர் தமிழ், அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் அந்த படம் பற்றிய அடுத்தகட்ட அப்டேட் எதுவும் அதன் பிறகு வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது.

சூர்யா சுதா கொங்கரா படம், வாடிவாசல், இந்தி படம் என அடுத்தடுத்து பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.