Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் போட்டி; கார்த்தி அறிவிப்பு


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (18:03 IST)
நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசிய பொருளாளர் கார்த்தி, வரும் ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

 

 
கடந்த ஆண்டு சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது விஷாலை பலரும் கடுமையாக விமர்சித்தனர். ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறவில்லை. அதேபோன்று தற்போது மீண்டும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது.
 
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். அதில், பேசிய பொருளாளர் கார்த்தி கூறியதாவது:-
 
ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம். இதற்காக ரஜினி மற்றும் கமலிடம் ஒப்புதல் பெற்றுள்ளோம். அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :