ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:59 IST)

குக் வித் கோமாளிக்கு போட்டியாக வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’.. சன் டிவியின் புரமோ வீடியோ..!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் சன் டிவியில் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு  என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது

இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவரில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாகவும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியில் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் பங்கேற்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக மோனிஷா பரத், தீபா,  உள்ளிட்ட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பது ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. மேலும் கடந்த சீசனில் கோமாளியாக கலக்கிய ஜிபி முத்துவும் இந்த நிகழ்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran