வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (16:32 IST)

25 வருடமாக கமலுக்கு பாடாத எஸ் பி பி! ஏன் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனுக்காக எஸ்பிபி கடைசியாக அவ்வை சண்முகி படத்தில்தான் பாடினார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் பாடகரும், நடிகருமான எஸ் பி பாலசுப்ரமண்யம் 40000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது அவரது ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ் பி பி தமிழ் சினிமாவில் நெருக்கமாக பழகிய நடிகர் என்றால் அது கமல்தான். அதுமட்டுமில்லாமல் கமலுக்காக தெலுங்கு படங்களில் டப்பிங் செய்தவர் எஸ் பி பாலசுப்ரமண்யம்தான். 80 களிலும் 90 களிலும் கமலுக்காக நூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ் பி பி. ஆனால் அவர் 1995 ஆம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படத்தில்தான் கமலுக்காக அவர் பாடினார். அதன் பின்னர் 25 ஆண்டுகளாக அவர் கமலுக்காக பாடிய எந்த பாடலும் வெளியாகவில்லை.

ஆனால் 2003 ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் படத்தில் அவர் ஒரு பாடலை பாடினாலும் அந்த பாடல் படமாக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் கமலே ஒரு கட்டத்தில் பாடகராக மாறி எல்லா படங்களிலும் பாடலை பாடியதே காரணம் என சமீபத்தில் பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.