வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (13:13 IST)

டார்ச் லைட் கண்டிப்பா வேணும்... டெல்லி வரை சென்ற கமல்!

தமிழகத்தில் பேட்டரி-டார்ச் சின்னத்தை ஒதுக்க டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் கமல் கட்சி முறையீடு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். 
 
இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பேட்டரி-டார்ச் சின்னத்தை ஒதுக்க டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் கமல் கட்சி முறையீடு செய்ய முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, சந்தோஷ் பாபு மற்றும் வழக்கறிஞர்கள் குழு டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளது.