1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (20:59 IST)

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சூரரை போற்று’: கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடித்த சூரரைப்போற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே அறிந்ததே 
 
குறிப்பாக சூர்யாவின் நடிப்பு, சுதா கொங்கராவின் திரைக்கதை ஜிவி பிரகாஷின் இசை ஆகியவை மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கு உள்ளானது
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த இயக்குனர் சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட ஒரு சில பிரிவுகளுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இதனை அடுத்து சூரரைப்போற்று படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்