சூர்யா 40 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்: சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

surya
சூர்யா 40 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்:
siva| Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:37 IST)
சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படமான ’சூர்யா 40’ என்ற திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படம் கிராமத்து கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் இன்று இசையமைப்பாளர் டி.இமான் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் இசை பிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் சூர்யா 40 படத்தின் இசையமைப்பாளர் டி இமான் தான் என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பு இமான் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி பிரபலங்களுக்கு இசையமைத்து வரும் டி இமான், தற்போது சூர்யாவுடன் இணைந்துள்ளார் என்பதும் இந்த படத்தின் இசை வேற லெவல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :